இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் இரட்டை சதமடித்ததுடன் 26 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 204 ரன்களையும், துருவ் ஜூரெல் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 94 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களயும் சேர்க்க மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் ஹல், ஸமான் அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லையன்ஸ் அணியில்பென் மெக்கின்னி 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எமிலோ கேவும் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹெய்ன்ஸுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஹோல்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் பொறுப்புடன் விளையாடி வந்த ஹெய்ன்ஸ் சதமடித்து அசத்திய நிலையில், ஹோல்டன் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இங்கிலாந்து லையன்ஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களைச் சேர்த்திருந்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டாம் ஹைன்ஸ் 103 ரன்களுடனும், மேக்ஸ் ஹோல்டன் 64 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் மேக்ஸ் ஹோல்டன் தனது சதத்தைப் பதிவுசெய்த நிலையில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜேம்ஸ் ரீவ் 8 ரன்களிலும், ரெஹான் அஹ்மத் 3 ரன்னிலும் என நடையைக் கட்ட, இரட்டை சதத்தை நெருங்கிய டாம் ஹெய்ன்ஸும் 171 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேன் மௌஸ்லி தனது சதத்தைப் பதிவுசெய்தார்.

Also Read: LIVE Cricket Score

பின்னர் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 113 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டேன் மௌஸ்லியும் தனது விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து லையன்ஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டாநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 527 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸமான் அக்தர் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய ஏ அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ், ஷர்தூல் தாக்கூர், ஹர்ஷ் தூபே, கருண் நாயர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 30 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து லையன்ஸ் அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News