WPL 2024: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Wed, Mar 06 2024 22:14 IST
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணி  - மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • யுபி வாரியர்ஸ் - 02
  • மும்பை இந்தியன்ஸ் - 02

உத்தேச லெவன்

யுபி வாரியர்ஸ்: அலிசா ஹீலி (கே), கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், சாமரி அத்தபத்து, தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், பூனம் கெம்னர், ராஜேஸ்வரி கெய்க்வாட், சைமா தாகூர், அஞ்சலி சர்வானி

மும்பை இந்தியன்ஸ்: ஹீலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, பூஜா வஸ்த்ரேகர், ஷப்னிம் இஸ்மாயில், ஹுமைரா காசி, சைகா இஷாக்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: அலிசா ஹீலி, யாஸ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ்: ஹர்மன்ப்ரீத் கவுர், கிரண் நவ்கிரே
  • ஆல்ரவுண்டர்கள்: கிரேஸ் ஹாரிஸ் (கேப்டன்), சாமரி அத்தபத்து, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் ப்ரண்ட், அமெலியா கெர் (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா
  • பந்து வீச்சாளர்: சோஃபி எக்லெஸ்டோன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை