ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது. 

Advertisement

இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே இருந்தது.

Advertisement

இதன் காரணமாக தற்சமயம், நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இதில் போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்தும், போட்டிக்கான நேரம் குறித்தும் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. அதேமயம் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 03ஆம் தேதி முதல் லீக் போட்டிகளிலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது அக்டோபர் 20ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் மட்டுமே நடைபெற உள்ளது. 

இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குரூப்பில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது. இதனால் இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதுபிக்கப்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை

  • 3 அக்டோபர், வங்கதேசம் v ஸ்காட்லாந்து, ஷார்ஜா, பிற்பகல் 2 மணி
  • 3 அக்டோபர், பாகிஸ்தான் vs இலங்கை, ஷார்ஜா, மாலை 6 மணி
  • 4 அக்டோபர், தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், துபாய், மதியம் 2 மணி
  • 4 அக்டோபர், இந்தியா v நியூசிலாந்து, துபாய், மாலை 6 மணி
  • 5 அக்டோபர், வங்கதேசம் v இங்கிலாந்து, ஷார்ஜா, பிற்பகல் 2 மணி
  • 5 அக்டோபர், ஆஸ்திரேலியா v இலங்கை, ஷார்ஜா, மாலை 6 மணி
  • 6 அக்டோபர், இந்தியா v பாகிஸ்தான், துபாய், மதியம் 2 மணி
  • 6 அக்டோபர், வெஸ்ட் இண்டீஸ் v ஸ்காட்லாந்து, துபாய், மாலை 6 மணி
  • 7 அக்டோபர், இங்கிலாந்து v தென் ஆப்பிரிக்கா, ஷார்ஜா, மாலை 6 மணி
  • 8 அக்டோபர், ஆஸ்திரேலியா v நியூசிலாந்து, ஷார்ஜா, மாலை 6 மணி
  • 9 அக்டோபர், தென் ஆப்பிரிக்கா v ஸ்காட்லாந்து, துபாய், பிற்பகல் 2
  • 9 அக்டோபர், இந்தியா v இலங்கை, துபாய், மாலை 6 மணி
  • 10 அக்டோபர், வங்கதேசம் v வெஸ்ட் இண்டீஸ், ஷார்ஜா, மாலை 6 மணி
  • 11 அக்டோபர், வெள்ளி, ஆஸ்திரேலியா v பாகிஸ்தான், துபாய், மாலை 6 மணி
  • 12 அக்டோபர், நியூசிலாந்து v இலங்கை, ஷார்ஜா, பிற்பகல் 2
  • 12 அக்டோபர், வங்கதேசம் v தென் ஆப்பிரிக்கா, துபாய், மாலை 6 மணி
  • 13 அக்டோபர், இங்கிலாந்து v ஸ்காட்லாந்து, ஷார்ஜா, பிற்பகல் 2
  • 13 அக்டோபர், இந்தியா v ஆஸ்திரேலியா, ஷார்ஜா, மாலை 6 மணி
  • 14 அக்டோபர், பாகிஸ்தான் v நியூசிலாந்து, துபாய், மாலை 6 மணி
  • 15 அக்டோபர், இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ், துபாய், மாலை 6 மணி
  • 17 அக்டோபர், அரையிறுதி 1, துபாய், மாலை 6 மணி
  • 18 அக்டோபர், அரையிறுதி 2, ஷார்ஜா, மாலை 6 மணி
  • 20 அக்டோபர், இறுதிப்போட்டி, துபாய், மாலை 6 மணி
Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News