வைபவ் சூர்யவன்ஷிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது - ஷேன் பாண்ட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக சதத்தை பூர்த்தி செய்த சூர்யவன்ஷி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ரன்கள் ஏதுமின்றி இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டை இழந்திருந்தார். இதனால் இப்போட்டியில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட், “வைபவ் சூர்யவன்ஷி வெளியே சென்று சுதந்திரமாக விளையாட உரிமம் பெற்றுள்ளார், இதன்மூலம் அந்த 14 வயது சிறுவன் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். நாங்கள் இவ்வளவு இளம் வயதினரைப் பார்த்து பீதி அடைய விரும்பவில்லை. ஏனெனில் அவர் சில நேரங்களில் தோல்வியடைவார், அதைச் சமாளிக்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்டத்தில் அவர் தவறவிட்டார், ஆனால் எங்களைப் பொறுத்தவரை, இவ்வளவு இளம் வயதினரைப் பார்த்து நங்கள் உண்மையில் பீதி அடைய விரும்பவில்லை. அவருக்கு அருமையான தொடக்கம் கிடைத்துள்ளது, ஆனால் அவர் ஏற்ற தாழ்வுகளையும் சந்திக்க நேரிடும். உங்களுக்குத் தெரியும், அவர் சில நேரங்களில் தோல்வியடைவார், அதைச் சமாளிக்க அவர் இளம் வயதிலெயே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரோவ்மன் பவல், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
Also Read: LIVE Cricket Score
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.