ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இரண்டு ரன்களை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தனது பந்துவீச்சு குறித்து பேசிய வருண் சக்ரவர்த்தி, “கடைசியாக நாங்கள் விளையாடிய விக்கெட்டை ஒப்பிடும்போது இது ஒரு நல்ல விக்கெட். ஏனெனில் இன்றைய போட்டியில் பந்து அதிகமாக திரும்பவில்லை.

Advertisement

நான் செய்யக்கூடியது என்னவென்றால், அதை ஸ்டம்ப் லைனில் ஒட்டிக்கொண்டு, பேட்டர் ஏதாவது தவறு செய்யும் வரை காத்திருப்பதுதான். டெத் மற்றும் பவர்பிளேயில் பந்துவீசுவது எனக்குப் பிடிக்கும், இது மிகவும் சவாலானது மற்றும் விக்கெட்டுகளை எடுக்க எனக்கு அதிக வாய்ப்பை அளிக்கிறது. குல்தீப், ஜடேஜா மற்றும் அக்ஸர் ஆகியோருடன் இணைந்து செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஏனெனில் நான் இந்த அமைப்பிற்கு மிகவும் புதியவன், மேலும் சில நல்ல பிணைப்புகளை உருவாக்க விரும்புகிறேன். போட்டியின் போது வலது காலில் பந்து தாக்கியதன் காரணமாக கொஞ்சம் வலி உள்ளது. இருப்பினும் இது விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். இப்போட்டியில் நாங்கள் தொடக்கம் முதலே நன்றாக பேட்டிங் செய்தால் நிச்சயம் இந்த இலக்கை எங்களால் எட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிராக இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 31 ரன்னிலும், நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த ரோஹித் சர்மா 76 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணி 122 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

New Zealand Playing XI: வில் யங், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க்.

Advertisement

India Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News