ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

Advertisement

மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து  574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த ஏலத்தில் சுமார் 81 வீரர்கள் அட்ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

அதேசமயம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரும் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் டேனியல் விட்டோரி இந்த ஏலத்திற்காக ஜித்தாவிற்கு செல்லவுள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளாராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் விட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வரும் டேனியல் விட்டோரிக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.  ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள புறப்படும் முன்பாக பெர்த் டெஸ்ட் போட்டிக்கு தேவையான பயிற்சியினை அவர் அணிக்கு அளித்துவிடுவார். அதன்பின் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் அணியுடன் இணைவார்” என்று தெரிவித்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

டேனியல் விட்டோரியைத் தவிர்த்து, பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான வர்ணனையாளர்களாக சேனல் செவனுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்கான முதல் டெஸ்டில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸிற்காக, ஜஸ்டின் லாங்கர் லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர்களாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News