இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆயுஷ் மாத்ரே மற்றும் ஹர்திக் தோமர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்த நிலையில், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 78 ரன்கள் எடுத்த கையோடு ஆயுஷ் மத்ரே தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் தோமரும் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 20 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸ்ரேயாஸுடன் இணைந்த ஷிவம் தூபேவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் ஷிவம் தூபேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 114 ரன்களையும், ஷிவம் தூபே 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் மும்பை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 382 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கர்நாடகா அணியில் தொடக்க வீரர்கள் நிகின் ஜோஸ் 21 ரன்னிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 47 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அனீஷ் மற்றும் கிரிஷ்ணன் ஸ்ரீஜித் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை அடித்து அசத்தியதுடன், 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அனீஷ் 82 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஸ்ரீஜித்துடன் ஜோடி சேர்ந்த பிரவீன் தூபேவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ஸ்ரீஜித் தனது சதத்தையும், பிவீன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிருஷ்ணன் ஸ்ரீஜித் 20 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 150 ரன்களையும், பிரவீன் தூபே 65 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கர்நாடகா அணி 46.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News