கம்பேக்கிற்கு தயாராகும் பென் ஸ்டோக்ஸ் - காணொளி!

Updated: Thu, Oct 14 2021 22:19 IST
VIDEO: Ben Stokes Ready To Make His Comeback, Shares Video Of Batting Practice (Image Source: Google)

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இளம் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினார். 

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாகவும், ஆஷஸ் தொடர் வெற்றி நாயகனாகவும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கலவரையின்றி ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் உறுதிசெய்தது.

இதன்காரணமாக அவர் இந்திய டெஸ்ட் தொடர், ஐபிஎல், டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் என முக்கிய தொடர்களிலிருந்து விலகினார். 

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் தனது பேட்டிங் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் காணொளியாக பதிவிட்டு உறுதிசெய்துள்ளார். 

 

மேலும் அப்பதிவில், “வியாழக்கிழமை ஒரு சாதாரண பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டேன். முதல் பந்தை எதிர்கொண்ட போது நான் சற்று தடுமாறினேன். பிறகு நான் என் கால் விரலை உடைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அதன்பின் நான் ஒரு நல்ல ஷாட்டை அடித்தேன். மீண்டும் பேட்டிங் பயிற்சிக்கு திரும்பியது நன்றாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பென் ஸ்டோக்ஸின் இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை