இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. 

Advertisement

இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜெர்மி சோலோசானோ அறிமுக வீரராக களமிறங்கினார். இப்போட்டியின் 24ஆவது ஓவரின் போது இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே பேட்டிங் செய்துகொண்டிருந்தார். 

Advertisement

அந்த ஓவரின் போது கருணரத்னே அடித்த பலமான ஷாட் ஒன்று ஷார்ட் லெக்கில் (Short Leg) பீல்டிங் செய்துகொண்டிருந்த சோலோசானோவின் முகத்தைப் பதம்பார்த்தது.

 

பந்தால் தாக்காப்பட்ட சோலோசானோ கீழே விழ, உடனடியாக மருத்துவ குழுவினர் களத்திர்கு விரைந்து ஸ்டிரெக்சரில் சோலோசானோவை தூக்கி சென்றனர். 

Also Read: T20 World Cup 2021

Advertisement

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உடபடுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் மைதானத்திலிருந்த அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News