ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணியை அறிவித்த ரோஸ்டன் சேஸ்!

Updated: Sat, Jun 11 2022 10:36 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரோஸ்டன் சேஸ். இவர் தற்போது நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ரே ஃபிளட்சர் தனது ஆல் டைம் பெஸ்ட் டி20 அணியைத் தேர்வு செய்துள்ளார். அதன்படி அவரது அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், சுனில் நரைன தேர்வுசெய்துள்ளார். 

மேலும் 3ஆம் வரிசையில் விராட் கோலியைத் தேர்வு செய்த ரோஸ்டன் சேஸ் 4 வரிசையில் ஏபி டி வில்லியர்ஸையும், ஐந்தாம் வரிசையில் மகேந்திர சிங் தோனியையும் தேர்வுசெய்துள்ளார். 

ஆறாவது வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட், ஏழாவது வரிசையில் ஆண்ட்ரே ரஸ்ஸல், எட்டாவது வரிசயில் டுவைன் பிராவோ ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

ஒன்பதாம், பத்து, பதினோறாம் வரிசையில் ரிஷித் கான், லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்துள்ளார். ரோஸ்டன் சேஸின் பெஸ்ட் லெவன் அணியில் இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ரோஸ்டன் சேஸின் பெஸ்ட் டி20 லெவன்: சுனில் நரைன், கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், எம்.எஸ்.தோனி, கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, ரஷித் கான், லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை