விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசியது. 

Advertisement

போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய புதுச்சேரி அணி ஃபாபித் அஹ்மதுவின் அரைசதத்தால் 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்தது. 

Advertisement

இதில் ஃபாபித் அஹ்மத் 87 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய தமிழ்நாடு அணியில் ஹரி நிஷாந்த், பாபா இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜெகதீசன் - தினேஷ் கார்த்திக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமும் கடந்தனர். 

பின்னர் 64 ரன்களில் ஜெகதீசனும், 65 ரன்னில் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் சரிவர விளையாடவில்லை. 

Advertisement

இதனால் 44 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் விஜேடி முறைப்படி புதுச்சேரி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News