விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா மோதல்!

Updated: Thu, Dec 23 2021 21:59 IST
Vijay Hazare Trophy: Tamil Nadu have the edge against Saurashtra in semis (Image Source: Google)

விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கோப்பைக்கான இறுதிக்கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் கால் இறுதி போட்டிகள் முடிந்தது.

அதன்படி தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. இதில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணி இறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் தமிழ்நாடு அணி விளையாடிய லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்தது. இருப்பினும் காலிறுதிப் போட்டியில் கர்நாடக அணியை எளிதில் வீழ்த்தியது தமிழ்நாடு.

இதனால் நம்பிக்கையுடன் விளையாடி சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் தமிழ்நாடு அணி உள்ளது.

நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இமாச்சல பிரதேசம்- சர்வீஸ் அணிகள் மோதுகின்றன. மேலும் இத்தொடரின் இறுதிப் போட்டி 26ஆம் தேதி நடைபெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை