விஜய் ஹசாரே கோப்பை: வாஷிங்டன் அசத்தல்; தமிழகத்திற்கு 226 இலக்கு!

Updated: Sun, Dec 12 2021 14:18 IST
Vijay Hazare Trophy: Washington Sundar's fifer helps TN restriect Puducherry by 225 runs (Image Source: Google)

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய புதுச்சேரி அணி தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 75 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்தது. 

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபபித் அஹ்மத் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 87 ரன்கள் எடுத்திருந்த அஹ்மத் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் புதுச்சேரி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை மட்டுமே சேர்த்தது. தமிழ்நாடு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை