சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு மகுடம் சூடிய விராட் கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (செப்.2) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி மிக மோசமாக தடுமாறி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், புதிய சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டியில் 23,000 ரன்களை எட்டிய வீரர் எனும் சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை கோஹ்லி வெறும் 490 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார். சச்சின் 522 இன்னிங்ஸ்களில் 23,000 ரன்களை எட்டினார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். அவர், 544 இன்னிங்ஸ்களில் 23,000 சர்வதேச ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் 551 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.