உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

Advertisement

இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். 

Advertisement

இந்நிலையில் சமீப காலமாகவே விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. மேலும் அவர் நிதனமாக விளையாடுவதாகவும், அதனால் அவர் விளையாடும் அணி பின்னடவை சந்திப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி தனது விளையாட்டை ரசிப்பதாகத் தெரிகிறது. பில் சால்ட்டுடன் விளையாடும் போது அவர் தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.  நாம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அதிரடியாக விளையாடும் வீரர்களில் பில் சால்ட் ஒருவர். அதனால் விராட் கோலியின் மீதனால் நிறைய அழுத்தத்தை அவர் குறைப்பார் என்று நான் நினைக்கிறேன்.

அதனால் பல வருடங்களாக விராட் கோலி என்ன செய்து வருகிறாரோ அதனை தொடர் வேண்டும். அவர் தனது ஆட்டத்தை கட்டுப்படுத்தி, புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எந்த வீரரையும் விட சிறந்த உள்ளுணர்வு அவரிடம் உள்ளது. எப்போது முன்னோக்கிச் செல்ல வேண்டும், எப்போது அதைக் குறைக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். கடந்த சில சீசன்களாக விராட் கோலியின் பேட்டிங்கின் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்த தொடரில் விராட் கோலி பேட்டிங் துறையின் கேப்டனாக இருக்க வேண்டும், உண்மையில் விஷயங்களை ஒன்றாக வைத்திருக்க வேண்டும், பேட்டிங் வரிசையில் அந்த சரிவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் எதிவரும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி வழக்கபோல் ரன்களைக் குவித்து ரசிகர்களை மகிழ்விப்பாரா என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News