ஸ்டார்க் பவுன்சரில் விக்கெட்டை இழந்த கோலி; காணொளி!

Updated: Thu, Jun 08 2023 21:53 IST
Image Source: Google

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷ்ப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் குறைந்தபட்சம், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் பக்கமாவது வந்தால் மட்டுமே வெற்றி பெற மடியும். இதன் காரணமாக, செம பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கில் 13 ரன்களும், ரோஹித் சர்மா 15 ரன்களும் , புஜாரா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கும் ஏமாற்றதாக காத்திருந்தது. 31 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, பொறுப்பாக விளையாடி 14 ரன்கள் சேர்த்தார்.

இதில் விராட் கோலி அடித்த கவர் டிரைவ் ஒன்று, அவர் இன்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்த மாதிரி பந்துகளை சரியாக விட்டு, பொறுமை காத்தார். போலாண்ட், கம்மின்ஸ் ஆகியோர் ஓவரை எல்லாம் விராட் கோலி தப்பித்தார்.

ஆனால் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஒன்று யாரும் எதிர்பாராத வகையில் எகிறியது. இதனை விராட் கோலி தடுக்க முயன்ற போது, பேட்டில் பந்து பட்டு, ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதனால், 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 269 ரன்கள் என்ற ஸ்கோரை தொட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை