டி20 உலகக்கோப்பை: விராட் கோலிக்கு காயம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Updated: Wed, Nov 09 2022 14:37 IST
Image Source: Google

நாளை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியமான மைதானம் எக்னபதால், அரையிறுதி ஆட்டத்தில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது.

விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் கோலி 907 ரன்களை அடித்திருக்கிறார். இதில் சராசரி 75.88 ஆகும். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அடிலெய்டில் கோலி 3 சதம், 4 அரைசதம் அடித்திருக்கிறார். 4 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கோலி, 2 சதம் அடித்திருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, 2 போட்டிகளில் விளையாடி 154 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 2 அரைசதம் அடங்கும். இதனால், அரையிறுதியில் விராட் கோலி பெரிதாக சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி பயிற்சி செய்து வந்தார். அப்போது ஹர்சல் பட்டேல் பந்தை கோலி எதிர்கொண்ட வந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஹர்சல் பட்டேல் வீசிய பந்தை கோலி கணிக்க தவறியதால், அது அவரை தாக்கியது. இதனால் வலியால் துடித்த விராட் கோலி மைதானத்தில் சுருண்டு விழுந்து சிறிது நேரம் மைதானத்திலேயே அப்படியே அமர்ந்து இருந்தார். 

ஆனால் விராட் கோலி மைதானத்தை விட்டு செல்லாமல், மீண்டும் தனது பயிற்சியை தொடங்கினார். எனினும் விராட் கோலிக்கு அடைந்த காயம் தொடர்பான முழு தகவலை பிசிசிஐ தெரிவிக்கவில்லை. மேலும் கோலி மீண்டும் பயிற்சியை தொடங்கியதால் , பிரச்சினை இருக்காது என கருதப்படுகிறது.

இதேபோல் நேற்றைய பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியின் போது காயமடைந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை