மோசமான சாதனை பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!

Updated: Thu, Oct 17 2024 11:09 IST
Image Source: Google

பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி 9 பந்துகளை சந்தித்த நிலையிலும் அதில் ஒரு ரன் கூட எடுக்காமல் 0 ரன்னில் வில்லியம் ஓ ரூர்க் பந்தில் கிளென் பிலிப்ஸ் அருமையான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இப்போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 536 சர்வதேச போட்டியில் விளையாடிய விரட் கோலி, 38ஆவது முறையாக ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்துள்ளார். அதேசமயம் ஹர்பஜன் சிங் தனது சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 37 முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இந்தியா அணிக்கான சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டனது வீரர் எனும் சாதனையில் முன்னாள் வீரர் ஜாகீர் கான் அதிகபட்சமாக 44 முறை ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழந்த்ஜு முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத்தொடர்ந்து இஷாந்த் சர்மா 40 முறையுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தற்சமயம் விராட் கோலி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் விராட் கோலி கோலி தனது பெயரில் மற்றொரு சாதனையை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியின் மூலம் இந்தியாவுக்காக அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். முன்னதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 535 சர்வதேச போட்டிகளில் விளையாடி இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது விராட் கோலி 536 போட்டிகளில் விளையாடி பின்னுக்கு தள்ளியுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டியைப் பெற்றி பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்னிலும், விராட் கோலி மற்றும் சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 10 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை