இளம் வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலி; ஐசிசி நடவடிக்கை பாயும் அபாயம் - காணொளி!

Updated: Thu, Dec 26 2024 08:25 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸின் அதிரடியான தொடக்கத்தின் மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 112 ரன்களைக் குவித்தது. 

அதிலும் குறிப்பாக தனது அறிமுக ஆட்டத்தில் விளையாடிய சாம் கொன்ஸ்டாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், 52 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் மொத்தமாக 64 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கொன்ஸ்டஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்துள்ள மார்னஸ் லபுஷாக்னேவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து வருவதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாம் கொன்ஸ்டாஸிடம் வம்பிழுத்த விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுத்தொடங்கியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கொன்ஸ்டாஸ், இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜுக்கு எதிராக பவுண்டரிகளை விளாசித் தள்ளினார்.

இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறி வந்த நிலையில், ஓவரின் முடிவின் போது நான் ஸ்டிரைக்கர் திசையை நோக்கி நடந்த கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். 

இந்நிலையில் விராட் கோலியின் இந்த செயலுக்கு வர்ணனையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களின் கண்டனத்தை பதிவுசெய்து வருகின்றனர். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கு விராட் கோலி, அறிமுக வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்புடையதாக இல்லை. மேலும் அவர் வாய்மொழியாக மோதியிருந்தால் கூட பரவில்லை, ஆனால் அவரை இடித்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. 

மேலும் களத்தில் இதுபோல் வீரர்களிடம் நடந்து கொள்வது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதும் கூட. இதனால் விராட் கோலிக்கு ஐசிசியின் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் குறித்த காணொளி தற்சமயம் இணையத்தில் வரைலாகி வருவதுடன், ரசிகர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை