விராட் கோலி என்னுடைய முன்மாதிரி - சாய் சுதர்சன் புகழாரம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அறிமுக வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் அவரது இடத்தை நிரப்பக்கூடிய வீரராக சாய் சுதர்ஷன் இந்த தொடரில் பார்க்கப்படுகிறார். ஏனெனில் நடந்து முடிந்த ஐபில் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக் விளைடியா சாய் 759 ரன்களைக் குவித்து, இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றுள்ளார். மேற்கொண்டு உள்ளூர் போட்டிகளிலும் அவர் தனது ரன் வேட்டையை தொடர்ந்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் 29 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் 7 சதங்கள், 5 அரைசதங்களுடன் 1957 ரன்களையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் விளையாடி 6 சதம், 6 அரைசதங்கள் என 1396 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு இந்திய அணிக்காக மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள சாய், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி தன்னை வாழ்த்தியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இறுதிப் போட்டி அவருக்கு மிகவும் சிறப்பான தருணமாக இருந்ததால் நான் அவரை வாழ்த்தினேன். ஆனால் பல ஆண்டுகளாக நாங்கள் பல உரையாடல்களை நடத்தியுள்ளோம். அவரது மனநிலையையும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பையும் நான் எப்போதும் பாராட்டியிருக்கிறேன்.
Also Read: LIVE Cricket Score
அவர் ரன்கள் எடுக்காதபோது சூழ்நிலையை அவர் எவ்வாறு கையாண்டார் என்பது பற்றி நாங்கள் பேசினோம். விராட் கோலி எனது முன்மாதிரி ஆவார். நான் எப்போதும் அவரது பேட்டிங்கின் ரசிகன், மேலும் அவரது நேர்காணல்களையும் கேட்டு வருகிறேன். நான் அவரை பின்பற்ற முயற்சிக்கிறேன். கடினமான காலங்களில் அவர் தன்னை எவ்வாறு கையாள்கிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவற்றை நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.