விராட் கோலி மிகச்சிறப்பான கேப்டன் - இயன் சேப்பல் புகழாரம்!

Updated: Sun, Jan 30 2022 19:25 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்குப்பின் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என இழந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் கேப்டன் பதவியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இருந்தாலும் அவர் தலைசிறந்த கேப்டனா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி வெற்றிக்கேப்டன், ஜோ ரூட் மோசமான கேப்டன் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இது இரண்டு கேப்டன்களுக்கு இடையிலான கதை. ஒருவர் அவருடைய கேப்டன் பதவியை சிறப்பாக செய்தார். மற்றொருவர் தோல்வியடைந்தார்.

விராட் கோலி விதிவிலக்கான கேப்டன் என்பதில் எந்த சந்தேகமுமம் இல்லை. விராட் கோலி அவருடைய உற்சாகத்தை கட்டுப்படுத்தவில்லை. ஆனால், இந்திய அணியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான தலைமை பண்பை பெற்றிருந்தார். துணைக் கேப்டன் ரகானே உடன் இந்திய அணியை வெளிநாட்டு மண்ணில் மற்றொரு கேப்டன் செய்த முடியாத அளவிற்கு வெற்றி பெறச் செய்தார்.

ஜோ ரூட் இங்கிலாந்து அணியை மற்ற கேப்டன்களை விட அதிக முறை வழி நடத்தியிருந்தால், அவர் கேப்டன்ஷிப்பில் தோல்வியடைந்துள்ளார். ஜோ ரூட் அல்லது இங்கிலாந்துகாரர்கள் என்ன சொன்னாலும் அது பெரிய விசயம் அல்ல. ரூட் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் மோசமான கேப்டன்.

கங்குலி, தோனியிடம் இருந்து இந்திய அணியின் பெருமையை பெற்றுக்கொண்ட விராட் கோலி, கடந்த ஏழு வருடமான அணியை தொடர்ச்சியாக சிறப்பான வகையில் கட்டமைத்துள்ளார். அவருடைய மிகப்பெரிய ஏமாற்றம், தென்ஆப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்ற பிறகு தொடரை இழந்ததுதான்’’ என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை