ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் கேப்டன்? கோலியின் நிலை என்ன?!

Updated: Mon, Sep 13 2021 12:30 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரி்க்கா ஆகிய அணிகளில் டெஸ்ட் மற்றும் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேப்டனாக இருப்பவர் அனைத்துப் பிரிவுகளையும் சமாளிப்பதும், சரியான கலவையில் அணியைத் தேர்வு செய்வதும் பலநேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறை கொண்டு வரப்பட்டது.

கடந்த 2007ஆம் ஆண்டுவரை இந்த முறைதான் இந்திய அணியிலும் இருந்தது. டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தோனி கேப்டன் பதவியைத் துறந்தபின், அனைத்து பிரிவுகளுக்கும் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டாலும் சிறிதுகூட தனது பேட்டிங்கில் தொய்வில்லாமல் பல நேரங்களில் அணிக்கு வெற்றி தேடித்தந்து, பொறுப்புள்ள கேப்டனாக இருந்துள்ளார்.

கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு போட்டி டையிலும், 2 போட்டிகள் முடிவில்லாமலும் இருக்கிறது. அதேபோல் 45 டி20 போட்டிகளில், 29 வெற்றிகளும், 19 தோல்விகளையும் கண்டுள்ளார். 2 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. மேலும் 65 டெஸ்ட் போட்டிகளில் 38 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

3 பிரிவுகளுக்கும் கேப்டனாக இருப்பதன் சிரமம், அழுத்தம், நெருக்கடி குறித்து பலமாதங்களாக ரோஹித் சர்மாவுடனும், அணி நிர்வாகத்துடன் கோலி ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய பயணத்துக்குப்பின் கோலியின் ஆலோசனை தீவிரமடைந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின் இந்திய அணியின் கேப்டன்ஷிப்பில் மாற்றம் வரும். ஒருநாள், டி20 போட்டிகளுக்கு தனியாக கேப்டன் நியமிக்கப்படுவார். ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து, கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார்” என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கடந்த 2019ஆம்ஆண்டிலிருந்து கோலியின் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு ஃபார்ம் இல்லை, குறிப்பாக கடைசியாக 50 இன்னிங்ஸ்களாக கோலி ஒரு சர்வதேச சதம்கூட கோலி அடிக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தபின் கோலி இதுவரை டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை. உலகத் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன் கோலியின் பேட்டிங்கிற்கு இதுபோன்ற பின்னடைவுகள், பெரும் அழுத்தத்தை கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை