ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இப்போட்டியில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்க்க, அடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 260 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. பின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்ததுடன், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இறுதியில் தொடர் மழை காரணமாக இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் எதிர்வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் விராட் கோலி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் விராட் கோலி மேற்கொண்டு 35 ரன்களை அடிக்கும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்க அடித்த வீரர்கள் பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறுவார். தற்போது இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 2143 ரன்களை சேர்த்து 4ஆம் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 2105 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 3262 ரன்களை குவித்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 2555 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிசிஎஸ் லட்சுமண் 2434 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தில் உள்ளனர். இருப்பினும் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலி ரன்களைச் சேர்க்க தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.