இலங்கை ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!

Updated: Tue, Jul 30 2024 22:35 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது. 

அதன்பின் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

27,000 சர்வதேச ரன்கள்

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி 116 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை எட்டவுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டும் நான்காவது வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெறுவார். 

முன்னதாக இந்திய அணியின் முன்னால் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இலங்கை அணியின் குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்துள்ளர். தற்போதுவரை விராட் கோலி, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சேர்த்து 530 போட்டிகளில் விளையாடி 26,884 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

14,000 ஒருநாள் ரன்கள்

இது தவிர சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை எட்ட விராட் கோலிக்கு மேலும் 152 ரன்கள் தேவை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 292 போட்டிகளில் விளையாடியுள்ல விராட் கோலி 58.67 என்ற சராசரியில் 13,848 ரன்களைக் குவித்துள்ளார். ஒருவேளை அவர் 14ஆயிரம் ரன்களை எட்டும் பட்சத்தில் இந்த மைல் கல்லை எட்டும் மூன்றாவது வீரர் எனும் பெருமையை பெறுவார்.

இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இத்தொடரில் விராட் கோலி இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் அதிவேகமாக 14ஆயிரம் ரன்களை குவித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிக சதங்கள் 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு வடிவத்திலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற அடிப்படையில் கூட்டாக முதலிடத்தை பிடிப்பார். இதன்மூன் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை