தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்த விராட் கோலி!

Updated: Tue, Mar 21 2023 16:27 IST
Image Source: Google

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி கிரிக்கெட் உலகில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கிறார். தற்போதும் படைத்து வருகிறார். கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசப்பட்டு வரும் விராட் கோலி தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பலவற்றை பகிர்ந்து கொண்டார். அதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு இன்னிங்ஸ்களை மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டு பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 

இதுகுறித்து பேசிய விராட் கோலி, “இதுவரை நான் விளையாடிய கிரிக்கெட்டில் என்னால் இந்த இரண்டு மைதானத்தில் நடந்த சம்பவங்களை மறக்கவே முடியாது. முதலாவதாக 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் நான் களம் இறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்களின் ஆரவாரம் இன்றளவும் என் நினைவில் இருக்கிறது.

அடுத்ததாக அக்டோபர் 23ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நான் விளையாடிய ஆட்டத்திற்கு பிறகு ரசிகர்களின் ஆரவாரம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இரண்டையும் என் கிரிக்கெட் வாழ்வு முழுவதும் என்னால் மறக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு சமீப காலமாக ரன்கள் நிறைய அடித்தும் உங்களது மனநிலையில் மிகவும் அமைதி நிலவுகிறது என்று கேள்வி எழுப்பிய போது, “எனது அணுகுமுறை எல்லாம் போட்டியை பொறுத்து இருக்கிறது. எனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அதில் ரன்கள் வருகிறது. இனி செஞ்சுரி அடிக்கவில்லையே என எவரும் என்ற ஒரு அமைதி தான்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை