ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதையடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற எந்தவொரு ஐசிசி தொடர்களிலும் கோப்பையை வெல்லாதாது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதனால் நடப்பாண்டு இந்திய அணி கோப்பையை வென்று அந்த ஏக்கத்தையும் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisement

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற விராட் கோலி மட்டும் தான் நடப்பு தொடரில் விளையாடுகிறார். இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

இது குறித்து பேசிய விராட் கோலி, “இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் எங்களுக்கு அளிக்கும் எல்லையற்ற ஆதரவு தான். கிரிக்கெட் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு தான் எங்களை உழைக்க வைக்கிறது.2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நாம் பெற்ற வெற்றி இன்னும் நமது மனதை விட்டு நீங்கவில்லை.

தற்போது புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த உலகக் கோப்பையிலும் நான் இடம்பெற்றது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களின் கனவுகளை மெய்ப்படுத்துவதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News