உள்ளூர் போட்டிகளில் விராட் கோலி விளையாட வேண்டும் - தினேஷ் கார்த்திக்!

Updated: Mon, Oct 28 2024 23:04 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்போது சிறப்பாக செயல்படும் இந்திய அணி, இத்தொடரில் அப்படியே நேர் மாறாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிவருகிறது. இதன் காரணமாகவே இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் எழத்தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலிக்கு பேட்டிங்கானது அவ்வளவு எளிதாக இல்லை, மேலும் இத்தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் விளையாடிய நான்கில் மூன்று இன்னிங்ஸ்களில் அவரால் பெரிதளவி ரன்களைச் சேர்க்க முடியாமல் ஏமாற்றம் அளித்துள்ளார்.

மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் அதிக அழுத்ததை சந்தித்து வரும் தொடராகவும் இது அமைந்துள்ளது. அதேசமயம் இத்திலுந்து வலுவாக வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் கண்டுபிடிப்பார் என்று நினைக்கிறேன். மேலும் சுழலுக்கு உதவும் ஆடுகளங்களில் விளையாடுவதை இந்தியா விரும்புகிறது என்றால், அவர்களுடைய திட்டம் என்னவாக இருக்கும்?. மேலும் விராட் கோலியின் திறமை என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால், இந்தத் தொடர் அவருக்கு சரிவர அமையவில்லை. ரசிகர்கள் சொல்வது போல், அவர் நீண்ட காலமாக சிறப்பான ஃபார்மில் விளையாடுவதில்லை. மேற்கொண்டு கடந்த 2-3 ஆண்டுகளில் விராட் கோலியின் டெஸ்ட் சாதனை, சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான தனது ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை