விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக இருந்தது - சவுரவ் கங்குலி!

Updated: Tue, Jun 13 2023 12:22 IST
Virat Kohli stunned BCCI by leaving Test captaincy: Sourav Ganguly (Image Source: Google)

இந்திய அணியின் நட்சத்திர வீரராக தகிழும் விராட் கோலி 2021 ஆம் ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை 1-2 என இந்திய அணி இழந்ததும் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டு விலகினார். இதற்கு முன்பாகவே டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது.

வெள்ளைப்பந்துக்கு ஒரு கேப்டன் சிவப்புப்பந்துக்கு ஒரு கேப்டன் என்பது சரி வரும். ஆனால் இரண்டுக்கும் ஒரே கேப்டன் இருப்பது சரிவராது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் காரணம் கூறியது. இந்தப் பிரச்சனைகளுக்குப் பின்னால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியும்தான் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்து வெளியேற்றினார்கள் என்று இன்றுவரை நம்பப்படுகிறது.

தற்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து பட்டத்தை இழந்திருக்கிறது. இதற்கு அடுத்து விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டனாக வரவேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடம் பெரியதாக இருக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள சவுரவ் கங்குலி, “இது தேர்வாளர்களின் வேலை. ஆனால் சமூக ஊடகங்களில் விராட் கோலிக்கு ஆதரவான நிலை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியே டெஸ்ட் கேப்டனாக இருக்க விரும்பாமல் விலகிக் கொண்டார். அது பிசிசிஐக்கு மிகப்பெரும் ஆச்சரியர்த்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக யார் இருக்க வேண்டும்? என்று கேட்டால் என்னை பொருத்தவரை அது ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட்தான்.

நிச்சயமாக இந்தக் கூட்டணி வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தொடரும். இதற்குப் பிறகு ரோஹித் என்ன நினைக்கிறார் அவர் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. தற்போதைய பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவருமே இந்தியாவிற்கு சிறந்தவர்கள். அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் வர நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை