ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் 3 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பிரதான சுற்று தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெறாத முன்னணி வீரர்கள் ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்காக தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்திய அணி நாளை மறுநாள் துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத விராட் கோலி தனது நேரத்தை குடும்பத்தாருடன் செலவிட்டு வருகிறார். சமீப காலமாக விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்பது கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் கேட்டு பாதாளத்திற்கு சென்று விட்டது.

முதல் முறையாக அவரது வாழ்க்கையில் டி20 தரவரிசை பட்டியலில் 20 இடங்களுக்கு மேல் விராட் கோலி சரிந்துள்ளார். அந்த அளவுக்கு அவருடைய பேட்டிங் டி20 கிரிக்கெட்டில் பாதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா,இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற பேச்சும் தற்போது அடிபட்டு வருகிறது. இதனால் விராட் கோலியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை.

இந்த நிலையில் விராட் கோலி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தீவிரப் பயிற்சி ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இன்று விராட் கோலியும் அவரது மனைவியும் மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் ஜாலியாக உலா வரும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பள்ளமும் மேடும் உள்ள அந்த சாலையில் இருவரும் ஹெல்மெட் அணிந்து வீதியில் உலா வந்தனர். 

 

Advertisement

இந்நிலையில் இது அனைத்தும் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட காணொளி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கோபமடைந்த ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் லட்சணம் இதுதானா என்று ரசிகர்கள் விராட் கோலியை பார்த்து சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News