ரோஹித்தை துணைக்கேப்டன் பதவிலிருந்து நீக்ககோரிய விராட் கோலி - தகவல்!
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி நேற்று டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு மிக முக்கிய காரணமாக ரோகித் சர்மா என்றே கூறலாம். ஐபிஎல் தொடரில் கோலியை விட ரோகித் சர்மா சிறப்பான கேப்டன்சியை செய்வதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வழுத்துவந்தன. எனவே கோலி தற்போது பதவி விலகியுள்ளதால், அவருக்கு அடுத்தபடியாக 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியில் துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என விராட் கோலி, தேர்வுக் குழுவிடம் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவிற்கு 34 வயதாவதால், அவருக்குப் பதிலாக கே.எல். ராகுலை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என விராட் கோலி தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போல டி20 அணியிலும் தனக்கு துணையாக ரிஷப் பந்தை துணைக் கேப்டனாக நியமிக்குமாறும் கோலி நிர்பந்தித்துள்ளார் எனக்கூறப்படுகிறது. விராட் கோலிக்கு தற்போது 32 வயதாகிறது. இதன் மூலம் கோலிக்கும் - ரோகித் சர்மாவுக்கு இடையே உள்ள பிரச்னை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
கோலி தனக்கு அடுத்தபடியாக யாராவது வளர்ந்து வந்தால் அவரை ஒதுக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என அவ்வபோது கருத்துக்கள் பரவி வருகிறது. அது தற்போது ரோகித் சர்மாவின் செயலின் மூலம் உண்மையாகியுள்ளதாக ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.