ஐபிஎல் 2021: ‘என்ன மனுசன்யா நீ’ வார்னரை புகழும் நெட்டிசன்கள்!

Updated: Tue, Sep 28 2021 11:59 IST
Warner Was Watching And Supporting The Team From Hotel, Says SRH's Trevor Bayliss (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு ஹைதராபாத் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இப்போட்டியில் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக, ஜேசன் ராய் களமிறக்கப்பட்டார். இந்த ஐபில் தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டி என்பதால், எப்படி விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அதே போன்று அரைசதம் அடித்த அவர் 60 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இந்நிலையில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, டேவிட் வார்னர் சூப்பர் என்று பாராட்டி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதைக் கண்ட நெட்டிசன்கள் தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் மீது ஈகோ இல்லாமல் டேவிட் வார்னர் இப்படி வாழ்த்தியிருப்பது, உண்மையில் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டு, அப்புகைப்படத்தை வைரலாக்க்கி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை