ஐபிஎல் 2022: வாஷிங்டனை கேள்வியால் மடக்கிய நடராஜன்!

Updated: Sat, Mar 19 2022 13:52 IST
Washington Sundar Comes Up With A Hilarious Response After SRH Pacer T Natarajan Asks “Do You Miss R (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறை முழுக்க முழுக்க இந்தியாவில் போட்டிகள் நடைபெறுகிறது.

அனைத்து அணி வீரர்களும் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துவிட்டு, தற்போது கடைசிகட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், வீரர்களின் பயிற்சி காணொளி, ஹோட்டல் காணொளி, நேர்க்காணல் செய்வது போன்ற பல காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிடும். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தமிழக வீரர்களை குறிவைத்து ஒரு ஸ்பெஷல் காணொளியை வெளியிட்டுள்ளது. அந்த அணி இந்த முறை வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் இருவர் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய போது, வாஷிங்டன் சுந்தர், “ஹைதராபாத் அணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. டாம் மூடி, பிரைன் லாரா, டேல் ஸ்டெயின் என தலைசிறந்த வீரர்கள் பயிற்சி அளிக்கின்றனர். லாராவுடன் எப்படியாவது இணைந்து செயல்பட வேண்டும் என்பது பல இளம் வீரர்களின் ஆசை. அது எனக்கும் கிடைத்துள்ளது” என பெருமையாக கூறி வந்தார்.

 

அப்போது காணொளியின் நடுவே குறுக்கிட்ட, டி. நடராஜன், ஆர்சிபியில் இருந்து ஹைதராபாத் அணிக்காக முதல் முறையாக சுந்தர் இங்கு வந்துள்ளார். " ஆர்சிபி - ஐ மிஸ் பன்றியா சுந்தர்.. இல்ல ஹைதராபாத் பிடிச்சிருக்கா எனக்கேட்டார்". ஆஹா கஷ்டமான கேள்வி என யோசித்த சுந்தார், இறுதியில் ஆர்சிபியை விட, ஹைதராபாத் நன்றாக உள்ளது எனத்தெரிவித்துவிட்டார்.

கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய வாஷிங்டன் சுந்தர், இந்தாண்டு ரூ. 8.5 கோடிக்கு ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை