ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இவர் இருப்பார் - ஷிகர் தவான் நம்பிக்கை!

Updated: Tue, Dec 06 2022 21:52 IST
Washington Sundar has a good mindset, will do great as all-rounder: Shikhar Dhawan (Image Source: Google)

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த இரு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே முதல் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் டிராப் செய்த கேட்ச் மற்றும் பேட்டிங்கில் சொதப்பியது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேபோல் வாஷிங்டன் சுந்தரை களத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடுவார் என்று இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ஷிகர் தவான் கூறுகையில், “உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக வரும் அனைத்து திறமையும் வாஷிங்டன் சுந்தருக்கு இருக்கிறது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்த சிந்தனையுடன் விளையாடி வருகிறார்.

நல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும், சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசியதோடு, பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். காயத்திலிருந்து மீண்டு வந்ததில் இருந்தே சுந்தர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இன்னும் சில போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவங்களை பெற்ற பின், சிறந்த கிரிக்கெட்டராக மாறுவார்” என்று தெரிவித்தார்.

ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு சிறந்த மாற்றாக வாஷிங்டன் சுந்தர் உருவாகி வருகிறார். ஏற்கனவே ஜடேஜாவுக்கு இணையான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் வாஷிங்டன் சுந்தர் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு மாற்று ஆல் ரவுண்டர் வீரராக வாஷிங்டன் சுந்தர் இருப்பர் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை