இந்திய அணி நேற்று வங்கதேச அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. ஆசியக் கோப்பையில் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

Advertisement

இந்த காரணத்தால் நேற்றைய தோல்வி இந்திய அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனாலும் கூட உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு இருக்கின்ற வீரர்களை வைத்து விளையாடிய காரணத்தினால், அவர்களுடைய பேட்டிங் அணுகுமுறை குறித்த கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.

Advertisement

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் பேட்டிங் நீளம் ஒன்பதாவது இடம் வரை இருந்தது. அவ்வளவு நீளமாக இருந்தும் 265 ரன்களை வெற்றிகரமாக இந்தியாவால் துரத்த முடியவில்லை என்பது கவலையான விஷயமே.

நேற்றைய போட்டியில் மேல் வரிசையில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 121 ரன்கள் அடித்து, இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்து கொண்டே இருந்தார். இவர் மேல் வரிசையில் சரியாக விளையாடாமல் இருந்திருந்தால், இந்த ரன்களுக்கு வாய்ப்பு மிகக்குறைவு.

அதே சமயத்தில் பேட்டிங்கில் எட்டாவது இடத்தில் வந்த அக்சர் படேல் முக்கியமான கட்டத்தில் 34 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார். வெற்றிக்கு அணியை மிக அருகில் அழைத்து வந்த அவர், எதிர்பாராத விதமாக ஆட்டம் இழக்க இந்திய அணியின் வெற்றி பறிபோனது. ஆனாலும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது.

நேற்றைய போட்டியில் விளையாடும் பொழுது அவருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது. கையில் பந்து அடித்து இருந்தது. இப்படி போட்டியில் அவருக்கு காயங்கள் உண்டாகிக்கொண்டே இருந்தது. இந்த காரணத்தினால் அவர் ஆசியக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இருந்து மட்டும் விலக்கி வைக்கப்படுகிறார். 

Advertisement

இந்நிலையில் அவரது இடத்திற்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற்வாரா எந்த சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கெனவே குல்தீப், ரவீந்திர ஜடேஜ இருப்பதால் இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் உள்ளது.

இதுவரை பதினாறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர் 16 விக்கெட்டுகளும், 233 ரன்களும் அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News