ஐபிஎல் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் ஏற்கனவே 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கேவும், 2 முறை கோப்பையை வென்றுள்ள கேகேஆரும் மோதுகின்றன. துபாயில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன. 

Advertisement

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

Advertisement

அந்தவகையில், இதுகுறித்து டுவீட் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர், “உலக கோப்பை வின்னிங் கேப்டன் மற்றும் நியூசிலாந்து பயிற்சியாளரை பெற்றிருக்கும் அணி தான் கோப்பையை வெல்லும்” என்று கூறியுள்ளார்.

 

இன்றைய இறுதிப்போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளின் கேப்டன்களுமே உலக கோப்பையை வென்ற கேப்டன்கள் தான். மேலும் 2 அணிகளின் பயிற்சியாளர்களுமே நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் தான். சிஎஸ்கே கேப்டன் தோனி 2011ஆம் ஆண்ட்டிலும், கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன் 2019லும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றவர்கள். சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் மற்றும் கேகேஆர் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகிய இருவருமே நியூசிலாந்தை சேர்ந்தவர்கள்.

இறுதிப் போட்டியில் மோதும் இந்த 2 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லமுடியும் என்பதை நாசூக்காக கூறியுள்ளார் வாசிம் ஜாஃபர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News