டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!

Updated: Sun, Apr 28 2024 16:31 IST
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் நடப்பு  டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் வீரரான வாசிம் ஜஃபரும், தான் தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார்.

அந்தவகையில் அவர் தேர்வு செய்துள்ள அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ரிங்கு சிங் போன்ற பேட்டர்களுடன் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ளார். மேலும் அணியின் ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும், பந்துவீச்சாளர்களில் குல்தீப், சஹால், பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் வழங்கியுள்ளார். 

முன்னதாக பல முன்னாள் வீரர்கள் தங்களுடைய அணியில் ஆல் ரவுண்டர் இடத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷிவம் துபேவை சேர்த்த நிலையில், வாசிம் ஜாஃப்ர் தனது அணியில் இருவரையும் சேர்த்துள்ளார். அதேசமயம் சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் யுஸ்வேந்தி சஹாலிற்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷிவம் தூபே, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை