ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகளிரவு ஆட்டமாக அடிலெய்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

Advertisement

அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 140 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 64 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 337 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலையும் பெற்றது. பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் சொதப்பியது. 

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற ஷுப்மன் கில் அணியை வலுவான நிலையை நோக்கி அழைத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. ஆனால் அவர் இப்போட்டியில் 28 ரன்களை எடுத்திருந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சின் மூலம் க்ளின் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ஷுப்மன் கில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பிய கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News