திலக் வர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணியில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர்.
அவர்களைத் தவிர்த்து கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்களைச் சேர்த்த்தை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 25, சூர்யகுமார் யாதவ் 14, திலக் வர்மா 18, வாஷிங்டன் சுந்தர் 10, அக்ஸர் படேல் 15, துருவ் ஜுரெல் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய ஹர்திக் பாண்டியாவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில், இந்தியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மாவின் விக்கெட்டை ஆதில் ரஷித் தனது அபாரமான பந்தின் மூலம் கைப்பற்றியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்படி, இப்போட்டியின் 8ஆவது ஓவரை ஆதில் ரஷித் வீசிய நிலையில் கடைசி பந்தை ஆஃப் டம்புக்கு வெளியே வீசிய நிலையில் அந்த பந்தானு பிட்சாகி பேட்ஸ்மேனுக்கு உள்பக்கமாக சென்றது.
Also Read: Funding To Save Test Cricket
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத திலக் வர்மா பந்தை தடுத்து ஆட முயற்சித்த நிலையில், அதனை தவறவிட்டார். இதனால் பந்து நேரடியாக ஸ்டம்புகளைத் தாக்கியது. ஒருகணம் பந்தை எப்படி தவறவிட்டோம் என்ற அதிர்ச்சியில் உறைந்த திலக் வர்மா, இப்போட்டியில் 17 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆதில் ரஷித்தின் இந்த அபாரமான பந்துவீச்சி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்நிலையில் ஆதில் ரஷித் விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.