அபாரமான கேட்ச் பிடித்து ஆச்சரியப்படுத்திய அலெக்ஸ் கேரி - வைரலாகும் காணொளி!

Updated: Sat, Feb 22 2025 15:19 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இரு அணிகளும் அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடியாக தொடங்கினார். இதனால் இப்போட்டியில் அவர் ரன்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்படி இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை பென் துவார்ஷூயிஸ் வீசினார். அப்போது ஓவரின் நான்காவது பந்தை அவர் ஃபுல் ஆன் பந்தை வீச அதனை எதிர்கொண்ட பில் சால்ட் மிட் ஆன் திசையில் பவுண்டரி அடிக்க நினைத்து நீக்கி அடித்தார். ஆனால் அவரால் எதிர்பார்த்தை போல் அந்த ஷாட்டி விளையாட முடியாத காரணத்தால், பந்து காற்றில் இருந்தது. அப்போது 30 யார்ட் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அலெக்ஸ் கேரி அபாரமான கேட்ச்சைப் பிடித்து ஆச்சரியப்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக பந்து அலெக்ஸ் கேரியை தாண்டிச் சென்ற நிலையில் அவர் பின் பக்கமாக சென்று அபாரமாக தாவி பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். அலெக்ஸ் கேரியின் இந்த கேட்ச்சை கண்ட அனைவரும் ஒருகணம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு நடையைக் கட்டினார். இந்நிலையில் அலெக்ஸ் கேரி பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

England Playing XI: பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

Also Read: Funding To Save Test Cricket

Australia Playing XI: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை