தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் - டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் டாம் அல்சப் 51 ரன்களையும், இமாத் வசீம் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Advertisement

இதனால் இன்னிங்ஸ் முடிவில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதீ 12 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.  அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிக்கு பென் டக்கெட் - கேப்டன் மொயீன் அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

Advertisement

இதில் மொயீன் அலி 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த டான் மௌஸ்லியும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.  பின்னர் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதில் ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 30 ரன்களையும், ஜேக்கப் பெத்தேல் 38 ரன்களையும் சேர்த்து அணியை பெறசெய்தனர். இதன்மூலம் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.  இந்நிலையில் இப்போட்டியில் அபரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

இந்நிலையில் இப்போட்டியின் போது பென் டக்கெட் அடித்த ஸ்கூப் ஷாட்டானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, இன்னிங்ஸின் 16ஆவது பந்தை லுக் வுட் புல்டாஸாக வீச, அதனை சற்றும் எதிர்பாராத பென் டக்கெட் ஒரு கணம் நிதனமாக இருந்ததுடன், புல்டாஸாக வந்த பந்தை ஸ்கூப் ஷாட்டின் மூலம் பவுண்டரிக்கு அனுப்பினார். தற்போது இந்த சம்பவத்தின் காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News