நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. அதன்பின்னர் நடந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை வென்றிருந்தது. 

Advertisement

இந்நிலையில், இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் வில் யங் ஒருபக்கம் ரன்களைச் சேர்த்த நிலையில், மறுபக்கம் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் டிம் ராபின்சன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து வில் யங்குடன் ஜோடி சேர்ந்த ஹென்ரி நிக்கோலஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்க்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. இதில் வில் யங் அரை சதம் கடந்து 56 ரன்னுடனும், ஹென்றி நிகோலஸ் 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இலங்கை அணி இந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பிடித்த ஒரு கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 4அவது ஓவரை முகமது சிராஸ் வீசிய நிலையில் அந்த ஓவரின் 2ஆவது பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து பேட்டர் டிம் ராபின்சன் அதனை பவுண்டரி அடிக்கு முயற்சியில் கவர் திசையை நோக்கி சிறப்பான ஒரு ஷாட்டை அடித்தார். மேலும் அவரது ஷாட்டும் சரியாக இருந்ததால் நிச்சயம் அந்த பந்து பவுண்டரி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

Advertisement

ஆனால் அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கணக்கச்சிதமாக தாவியதுடன், தலைக்கு மேல் சென்ற பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டிம் ராபின்சனும் ஏமாற்றத்துடன் பெவிலினுக்கு திரும்பினார். இந்நிலையில் சரித் அசலங்கா பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News