Tim robinson
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகளுக்கும் இடையேயன முதல் போட்டி இன்று (அக்டோபர் 1) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் டெவான் கான்வே, டிம் செஃபெர்ட், மார்க் சாப்மேன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த டிம் ராபின்சன் - டேரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டேரில் மிட்செல் 34 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பெவான் ஜேக்கப்ஸும் 20 ரன்னில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த டிம் ராபின்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
Related Cricket News on Tim robinson
-
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவை 130 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20: தொடரிலிருந்து விலகிய பிலீப்ஸ்; நியூசிலாந்திற்கு பின்னடைவு!
முத்தரப்பு டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ராபின்சன், ஜேக்கப் டஃபி அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டிம் ராபின்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த சரித் அசலங்கா; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பிடித்த அபாரமான கேட்ச் ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs NZ 4th T20I: பாகிஸ்தான வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
தொடர் மழை காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47