ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மகாலா; மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

Updated: Mon, Apr 03 2023 14:19 IST
Watch Csk Player Sisanda Magala Maiden Odi 5 Wicket Haul In A Crucial Win For South Africa Before Jo (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஓபனர்கள் டி காக் 8, கேப்டன் பவுமா 6 இருவரும் படுமோசதாக சொதப்பினார்கள். இதனைத் தொடர்ந்து எய்டன் மார்க்கரம் 126 பந்துகளில் 17 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 175 ரன்களை குவித்து அசத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டேவிட் மில்லரும் 61 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 91 ரன்களை விளாசினார். இறுதியில், கிளாசின் 28 (21), யான்சன் 11 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 370/8 ரன்களை குவித்தது.

அதன்பின் மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி அபாரமாக பந்துவீசியது. மேக்ஸ் ஓடவுட் 47 , மூசா அகமது 61, எட்வர்ட்ஸ் 42 ஆகியோர் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், நெதர்லாந்து அணி 224/10 ரன்களுக்கு சுருண்டது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிசாண்டா மகாலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

சிஎஸ்கேவுக்காக ஒப்பந்தமாகியுள்ள சிசாண்டா மகாலா சரியான லெந்த், லைனில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இதனால், சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சு இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டெத் ஓவர்களில் இவர் சம்பவம் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

 

ஏற்கெனவே சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் டெத் ஓவர்களில் சோபிக்காத காரணத்தால் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில் சிசாண்டா மகாலா அணிக்குள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகாலா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை