தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 120 ரன்களையும், சஞ்சு சாம்சன் 109 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் அந்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டபஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். பின் மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Advertisement

பின்னர் களமிறங்கிய வீரர்களில் மார்கோ ஜான்சன் 29 ரன்களைச் சேர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது. மேலும் சதமடித்து அசத்திய திலக் வர்மா, தொடர் மற்றும் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் அடித்த சிக்சர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி வருன் சக்ரவர்த்தி வீசிய இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை எதிர்கொண்ட டேவிட் மில்லர் ஓவரின் 5ஆவது பந்தை மிட் ஆன் திசையை நோக்கி இமாலய சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார். அந்த சிக்ஸரானது மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்ததுடன் 110 மீட்டர் தூரத்திற்கும் சென்றது. 

மேற்கொண்டு அந்த ஓவரில் மட்டும் 100 மீட்டர்களுக்கு மேல் இரண்டு இமாலய சிக்ஸர்களை டேவிட் மில்லர் விளாசி இருந்தார். ஆனால் அதன்பின் அந்த ஓவரின் கடைசி பந்திலேயே டேவிட் மில்லர் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் டேவிட் மில்லர் அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News