ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி

Updated: Tue, Jul 15 2025 12:48 IST
Image Source: Google

Zimbabwe T20I Tri-Series: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரீவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஜிம்பாப்வேவில் நடைபெறும் முத்தாரப்பு டி20 தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது சிக்கந்தர் ரஸாவின் அரைசதத்தைன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 54 ரன்களையும், பிரையன் பென்னட் 30 ரன்களையும் சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ருபின் ஹர்மான் 45 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 41 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய டெவால்ட் பிரீவிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் டெவால்ட் பிரீவிஸ் ஹாட்ரிக் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். அதன்படி தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின் 11ஆவாது ஓவரை ஜிம்பாப்வே வீரர் ரியான் பார்ல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ருபின் ஹர்மான் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை டெவால்ட் பிரீவிஸிடம் கொடுத்தார்.

Also Read: LIVE Cricket Score

அந்த ஓவரில் டெவால் பிரிவீஸ் 4ஆவது பந்தில் மிட் விக்கெட் திசைக்கும் மேல் சிக்ஸரை பறக்கவிட, அடுத்த பந்தில் பந்துவீச்சாளர் தலைக்கு மேல் சிக்ஸாரை விளாசினார். அத்துடன் நிறுத்தாத அவர் ஓவரின் கடைசி பந்தில் லாங் ஆஃப் திசைக்குமேல் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி மொத்தமாக அந்த ஓவரில் 25 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் டெவால்ட் பிரீவிஸ் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை