கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணியில் ஃபகர் ஸமான், கோஃபி ஜேம்ஸ் மற்றும் இமாத் வசிம் ஆகியோரைத் தவிர்த்து மற்ற விரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதனால் அந்த அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 40 ரன்களையும், இமாத் வசிம் 40 ரன்களையும், கோஃபி ஜேம்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். கயனா அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கயானா அமேசன் வாரியர்ஸ் அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அந்த அணியில் ஷாய் ஹோப் 41 ரன்களையும், ரொமாரியோ செஃபெர்ட் 32 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆல் ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் கடைசி ஓவரை எதிர்கொண்டார்.  முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளையும், கடைசி பந்தில் சிக்ஸரையும் விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

 

இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் டுவைன் பிரிட்டோரியஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News