ஆஷஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரி டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஏனெனில் இங்கிலாந்து அணி அப்படி வெற்றி வேட்கையுடன் விளையாடுவதாக தெரியவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி, 2 டெஸ்ட்டிலுமே படுதோல்வி அடைந்திருக்கிறது.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், வரும் 26ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹாசீப் ஹமீத் ஆகியோர் பேட்டிங் படிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால், தொடரை இலக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.