பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல் - காணொளி!
Glenn Maxwell Amazing Catch to Dismiss Ryan Rickelton: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டாரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகப்சட்சமாக டிம் டேவிட் 4 பவுண்டரி, 8 சிக்ஸர் என 83 ரன்களைக் குவித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கல்டான் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வக்கிறது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
அதன்படி, இன்னிங்ஸின் கடைசி ஓவரை பென் துவார்ஷூயிஸ் வீசியா நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரியான் ரிக்கெல்டன் லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க முன்று தூக்கி அடித்தார். மேலும் அவர் அந்த ஷாட்டை சிறப்பாக விளையாடியதன் காரணமாக பந்து சிக்ஸருக்கு சென்றது என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெல் அற்புதமான கேட்சைப் பிடித்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
இதனால் இப்போட்டியில் ரிக்கெல்டன் 71 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பியதுடன், தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வியும் உறுதியானது. இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.