சீண்டிய சாம் கொன்ஸ்டாஸ்; விக்கெட் வீழ்த்தி பதிலடி தந்த பும்ரா - காணொளி!

Updated: Fri, Jan 03 2025 13:31 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கொன்ஸ்டாஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார்.

அதேசமயம் உஸ்மான் கவாஜா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் கொன்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 176 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்நிலையில் இன்றைய நாளின் இறுதி நிமிடங்களில் ஆட்டத்தின் பரபரப்பு உச்சத்தை எட்டியது. ஏனெனில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதன்படி, இன்னிங்ஸின் 3ஆவது ஓவரை பும்ரா வீசிய நிலையில் ஸ்டிரைக்கில் இருந்த உஸ்மான் கவாஜா வேண்டும் என்றே நேரத்தை கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 

 

இதனால் கோபமடைந்த பும்ரா கள நடுவரிடம் முறையிட்ட நிலையில், நான் ஸ்டிரைக்கரில் இருந்த சாம் கொன்ஸ்டாஸ் சில வார்த்தைகளை விடுத்தார். இதனால் கோபமடைந்த பும்ரா உடனடியாக ஆக்‌ஷோரமாக கொன்ஸ்டாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஒருகணம் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் வசைபாடிய நிலையில், கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்திய கையோடு, நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த சாம் கொன்ஸ்டாஸை நோக்கி ஆக்ரோஷமாக சென்று கொண்டாடினார். இதனால் களத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சாம் கொன்ஸ்டாஸ் - ஜஸ்பிரித் பும்ரா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை