வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான் 44 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் தன்ஸிம் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் உள்ளிட்டோர் சோபிக்கத் தவறினர். இருப்பினும் பர்வெஸ் ஹொசைன் எமான் 56 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 36 ரன்களைம் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூல்ம் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தது, அதற்கு மேல் ஒரு விசித்திரமான ரன்அவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அணிக்காக அதிக ரன்கள் எடுத்து வந்த ஃபக்கர் ஜமான், குஷ்தில் ஷாவின் அழைப்பிற்கும், திடீரென 'ரன் இல்லை' என்ற முடிவுக்கும் பலியானார். இந்த வேடிக்கையான ரன்அவுட் சமூக ஊடகங்களில் வைரலாகி, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் குழப்பத்திற்கு ஒரு புதிய உதாரணமாக மாறியது.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் ஃபகர் ஸ்மான் 44 ரன்களைச் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்படி இன்னிங்ஸில் 12ஆவது ஓவரை முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீசிய நிலையில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட குஷ்தில் ஷா இரண்டு ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஓடினார். இதில் இருவரும் முதல் ரன்னை பூர்த்தி செய்த நிலையில், இரண்டாவது ரன்னை எடுக்க முயற்சி செய்தானர்,
அப்போது, இரண்டாவது ரன் எடுக்க இருவரும் முயற்சி செய்த நிலையில் திடிரெனா குஷ்தில் ஷா ரன் வேண்டாம் என்று கூறினார். ஆனால் ஃபகர் ஸ்மான் பாதி பிட்சை கடந்த நிலையில் அவரால் மீண்டும் க்ரிஸுக்குள் நுழைய முடியவில்லை. இதனால் இப்போட்டியில் ஃபகர் ஸமான் ரன் அவுட்டானதுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இந்நிலையில் ஃபகர் ஸமான் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.